News November 17, 2024
₹16 கோடிக்கு ஏலம் போன டைட்டானிக் தங்க கடிகாரம்!

டைட்டானிக் கப்பலில் சென்ற பயணிகள் 700 பேரை காப்பாற்றிய கேப்டன் ரோஸ்ட்ரானின் தங்க கடிகாரம், ₹16.50 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்தது. இந்தக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களில் இந்த கடிகாரமானது, மிக உயர்ந்த தொகைக்கு விலைபோனதாகக் கூறப்படுகிறது. 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வரலாற்றில் மோசமான கடல் விபத்துகளில் ஒன்றாக டைட்டானிக் விபத்து (ஏப். 15, 1912) இன்றளவும் கருதப்படுகிறது.
Similar News
News March 10, 2026
BREAKING: கேஸ் சிலிண்டர்.. அரசு அவசர அறிவிப்பு

சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்கள் சட்டம் 1955-ஐ மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்கும் வகையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சிலிண்டர்களை பதுக்குதல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படுவதோடு, கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
News March 10, 2026
அதிமுகவில் இணைந்த மதிமுகவின் முக்கிய தலைவர்!

மதிமுக மாநில நிர்வாகி கோடையடி ராமசந்திரன், கடம்பூர் ராஜு முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவரது ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்டோரும் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். மதிமுகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ள விருதுநகரில் நடந்த இந்த மாற்றம் திமுக கூட்டணிக்கு சற்று ஷாக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தேமுதிக நிர்வாகிகள் சிலரும் அதிமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கசிந்துள்ளது.
News March 10, 2026
Sports 360°: சர்ச்சையில் சிக்கிய கால்பந்து லெஜெண்ட் மெஸ்ஸி

➤இலங்கை அணியின் கோச்சாக இந்தியாவின் Ex. கோச் கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார் ➤ஹாக்கி WC தகுதிச்சுற்றில் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தை 2-2 என சமன் செய்தது இந்திய மகளிர் அணி ➤வெள்ளை மாளிகையில் ஈரான் மீதான தாக்குதல் குறித்து டிரம்ப் பேசியதை கைதட்டி வரவேற்றதால் மெஸ்ஸி சர்ச்சையில் சிக்கியுள்ளார் ➤மகளிர் ஆசிய கோப்பை(கால்பந்து): காலிறுதி வாய்ப்பை தக்கவைக்க இன்று சீன தைபே உடன் இந்தியா மோதுகிறது.


