News November 17, 2024
அரசியலில் இருந்து விலக தயார்: சித்தராமையா

கர்நாடக காங்கிரஸ் அரசு மீதான குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வுபெறத் தயார் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். மக்கள் பணத்தை கர்நாடக அரசு கொள்ளையடித்து, மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதாக மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு முதல்வர் சித்தராமையா இவ்வாறு அளித்துள்ளார்.
Similar News
News March 22, 2026
தமிழகத்தில் ₹75 கோடி ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

TN முழுவதும் நடந்த சோதனையில் இதுவரை ரொக்கம் மட்டும் ₹23.74 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக CEO அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். ₹23.19 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருள்கள், ₹6.16 கோடி மதிப்பிலான மது & போதை பொருள்கள், இலவச பொருள்களோடு ரொக்கத்தையும் சேர்த்தால் ஒட்டுமொத்த மதிப்பு ₹75.3 கோடி ஆகும். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ரொக்கம், நகைகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
News March 22, 2026
கூட்டணியில் சுயமரியாதையை இழந்ததா விசிக?

அரசியலில் தங்கள் வளர்ச்சியை முன்னிறுத்தி திமுக கூட்டணியில் 10 சீட்டுகள் கேட்டு விசிக நெருக்கடி கொடுக்கிறது. ஆனால், திமுகவோ 5 (அ) 6 சீட்டுகள் மட்டும்தான் என விடாப்பிடியாக உள்ளதாம். இதனால், தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், திருமாவளவன் தனது சுயமரியாதையை இழந்து திமுகவுடன் பயணிப்பதாக அதிமுக, பாஜக விமர்சித்து வருகின்றன. அதற்கு பதிலடியாக விசிக கூடுதல் சீட்டை கேட்டுப் பெறுமா?
News March 21, 2026
கடன் தள்ளுபடி.. வெளியாக போகும் திமுக தேர்தல் அறிக்கை

திமுக தேர்தல் அறிக்கை இன்னும் ஓரிரு நாள்களில் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதில், *மாணவர்களின் கல்விக்கடன் நிலுவைத் தொகை தள்ளுபடி *சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ₹10,000 வரை மானியம் *மகளிருக்கு சிறப்பு உரிமைத்தொகை *சிறு, குறு விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி *நிலமற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா & கான்கிரீட் வீடுகள் உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாம்.


