News November 17, 2024
கங்குவா மீது திட்டமிட்டு அவதூறு: ஜோதிகா குற்றச்சாட்டு

கங்குவா படத்தின் முதல் ஷோ முடியும் முன்பே எதிர்மறை விமர்சனங்களை பரப்பியதாக நடிகை ஜோதிகா வேதனை தெரிவித்துள்ளார். படத்தின் முதல் அரை மணி நேரம் சுமாராக இருந்ததாகக் கூறிய அவர், குறை இல்லாத படத்தை எடுக்க முடியாது எனவும், அதற்காக ஒட்டுமொத்த படத்தை விமர்சிப்பதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பல குழுக்கள் திட்டமிட்டு இப்படத்திற்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News March 6, 2026
வார விடுமுறை.. சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

வார விடுமுறையை முன்னிட்டு, மக்கள் சிரமமின்றி சொந்த ஊர் செல்வதற்கு ஏதுவாக இன்று முதல் 3 நாள்களுக்கு 865 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், 1,000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் புக் செய்துள்ளனர். எனவே, சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளோர் உடனே இங்கே <
News March 6, 2026
CINEMA 360: மார்ச் 9-ல் ‘ஜன நாயகன்’ ரிவ்யூ!

*வரும் மார்ச் 9-ம் தேதி ‘ஜன நாயகன்’ படத்தை சென்சார் போர்டின் ரிவைசிங் கமிட்டி பார்க்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது *ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜெய், சுராஜ் ஆகியோரின் நடிப்பில் ‘டெக்ஸ்லா’ என்ற படத்தை இயக்கி வருகிறார் * துரந்தர் 2 படத்தின் டிரெய்லர் வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாகவுள்ளது *சுமார் ₹31.5 கோடி மதிப்பில் சென்னை போயஸ் கார்டனில் நடிகை நயன்தாரா வீடு வாங்கியுள்ளாராம்
News March 6, 2026
மேகதாது விவகாரம்.. தமிழகத்துக்கு பின்னடைவு

மேகதாது அணைக்கு எதிராக SC-ல் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. இது கர்நாடகாவுக்கு கிடைத்த வெற்றி என்று, பட்ஜெட் உரையில் அம்மாநில CM சித்தராமையா கூறியிருக்கிறார். அத்துடன், இத்திட்டம் தொடர்பாக புதிய திருத்தப்பட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் எனவும், விரைவில் அது மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.


