News November 17, 2024

அஜித்-சிவா இணையும் படத்தின் டைட்டில் இதுவா?

image

சிவா-அஜித் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியிருந்தார். இந்த செய்தி வெளியானதில் இருந்தே படத்திற்கு என்ன பெயர் வைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. ஏனென்றால் சிவா-அஜித் கூட்டணியில் இதுவரை வெளியான அனைத்து படங்களின் டைட்டிலும் V என்ற எழுத்தில் தொடங்கும் இந்நிலையில் இப்படத்திற்கு ‘வெறித்தனம்’ என டைட்டில் வைக்க இருப்பதாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது.

Similar News

News March 11, 2026

CINEMA 360: சூர்யா 47 படத்தில் சிம்பு!

image

*ஜித்து மாதவன் இயக்கி வரும் ‘சூர்யா 47’ படத்தில் கேமியோ ரோலில் சிம்புவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம் *ரஜினி நடிக்க மறுத்த அஸ்வத் மாரிமுத்துவின் கதையில் கமல் நடிக்கலாம் என கூறப்படுகிறது *நயன்தாரா, கவின் நடித்து வரும் ‘ஹாய்’ படத்தின் புது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது * ராஜ் நிடிமோரு இயக்கும் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 11, 2026

வீட்டு கேஸ் சிலிண்டர்.. அரசு கொடுத்த மகிழ்ச்சி செய்தி

image

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிலிண்டர் தட்டுப்பாடு பற்றி மக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டரை முன்னுரிமை அடிப்படையில் விநியோகித்து வருவதாகவும், முன்பதிவு செய்த இரண்டரை நாளில் விநியோகம் செய்யப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. SHARE

News March 11, 2026

குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல்: நயினார்

image

வரும் தேர்தலில் திமுக நடத்தும் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என நயினார் கூறியுள்ளார். NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 2026 தேர்தலானது TN Vs DELHI தேர்தல் என CM ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், இது குடும்ப ஆட்சிக்கும் TN மக்களுக்கும் இடையிலான தேர்தல் என்று தெரிவித்தார். மேலும், PM மோடி தமிழகம் வரும் போதெல்லாம் தாய்மாமன் சீர் போல பல கோடி மதிப்புள்ள திட்டங்களை கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

error: Content is protected !!