News November 17, 2024
மறுசுழற்சி குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம்

2.0 தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் போன்றவற்றில் இருந்து வெளியேற்றப்படும் மற்றும் அனைத்து வீட்டு உபயோகத் தண்ணீர் மற்றும் கழிவுநீரை சேகரித்து மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து solidwastecorp7@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.
Similar News
News September 10, 2025
BREAKING: அடையாறு பகுதியில் ED சோதனை

சென்னை, அடையாறு பகுதியில் உள்ள மருத்துவர் இந்திரா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக இந்த சோதனை நடைபெற்ற வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதால் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News September 10, 2025
சென்னை: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

சென்னை சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம்)
News September 10, 2025
சென்னை அருகே தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்

சென்னை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள பண்ணை வீட்டில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் ஜீவன். இவரது தம்பி தேஜ். ஜீவனிடம், தேஜ் 1 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். ஆனால் ஜீவன் பலமுறை கேட்டும் பணத்தை கொடுக்கததாதல், ஆத்திரமடைந்த ஜீவன் தம்பியான தேஜை கத்தியால் வெட்டிக் கொலை செய்தானர். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.