News November 17, 2024

கோவையில் ஆட்டோ ஓட்டும் ஷர்மிளா

image

கோயமுத்தூர் மாவட்டத்தில் முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா காஞ்சிபுரம் டு சோமனூர் வழியாக பேருந்து இயக்கி வந்தார். பேருந்து ஓட்டுவதை நிறுத்திவிட்டு தற்போது ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ இயக்கி வருகிறார். தற்போது சமூக வலைதளங்களில் அவரது திறமையை பாராட்டி பொதுமக்கள் கருத்தினை பதிவிட்டு வருகின்றனர். ஷர்மிளா பேருந்து ஓட்டும் போது அனைத்து அரசியல் தலைவரும் பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 8, 2026

சட்டமன்ற தேர்தலில் கோவையில் களமிறங்கும் செந்தில்பாலாஜி?

image

கோவை மண்டல திமுக பொறுப்பாளராகச் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்ட பின், உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக அபார வெற்றி பெற்றது. இதனால் வரும் தேர்தலில் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வேண்டுமெனப் பல நிர்வாகிகள் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர் கோவை அல்லது கரூர் என எந்த தொகுதியில் களம் காண்பார் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் சூடுபிடித்துள்ளது. உங்கள் கருத்து என்ன மக்களே?

News March 8, 2026

கோவையில் ஒரே நாளில் 28 எஸ்.ஐ-க்கள் அதிரடி இடமாற்றம்!

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மூன்றாண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதன் பேரில் கோவை மாநகரில் ஒரே நாளில் 28 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையினை சிட்டி போலீஸ் கமிஷனர் கண்ணன் நேற்று வெளியிட்டுள்ளார்.

News March 8, 2026

ஆலாந்துறை: வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

கோவை ஆலாந்துறையை சேர்ந்தவர் செல்வராஜ் (55). இவர் உக்கடம் அரசு போக்குவரத்து கழக கிளையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று நேற்று கோவை பூலுவப்பட்டி – சித்திரைச்சாவடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் காயமடைந்து செல்வராஜ் உயிரிழந்தார். இது குறித்து ஆலாந்துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!