News November 17, 2024

விராட் இல்லை, இவர் தான் RCB அணியின் அடுத்த கேப்டனா?

image

அடுத்த RCB கேப்டனாக மீண்டும் விராட் கோலி நியமிக்கப்படுவார் என்று பேசப்பட்டது. ஆனால், தற்போது RCB அணி Auction’இல் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை குறிவைப்பதாகத் தகவல் உள்ளது. மேலும், அவருக்கு Captain பதவி கொடுக்கும் முனைப்பிலும் அந்த அணி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2016’இல் IPL சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கோப்பையை கேப்டனாக வென்றவர் வார்னர் என்பது குறிப்பிடத்தக்கது. இ சாலா கப் நம்தே நடக்குமா?

Similar News

News March 2, 2026

LNG உற்பத்தியை நிறுத்திய கத்தார்.. விலை உயர வாய்ப்பு

image

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு(LNG) ஆலையான ராஸ் லஃபான் தொழில்துறை நகரத்தை ஈரான் தாக்கியுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக LNG உற்பத்தியை நிறுத்தி வைப்பதாக கத்தார் எரிசக்தி துறை அறிவித்துள்ளது. உலகின் 20% LNG உற்பத்தி கத்தாரிடம் இருப்பதால், அதன் விலை சர்வதேச அளவில் உயர வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

News March 2, 2026

கூட்டணியில் இருந்து விலகினார்.. இபிஎஸ் ஷாக்

image

பாஜக, அதனுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அறிவித்துள்ளது. EPS-ஐ சந்தித்து அதிமுகவுடன் கூட்டணி என அக்கட்சியின் மாநில செயலாளர் கதிரவன் அறிவித்திருந்தார். இந்நிலையில் அவரை தற்காலிக சஸ்பெண்ட் செய்ததுடன், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தேவராஜன் அறிவித்துள்ளார். இதனால் EPS மற்றும் அதிமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

News March 2, 2026

ஈரானின் தாக்குதலுக்கு மோடி கண்டனம்

image

போர் நடைபெறும் பஹ்ரைன், சவுதி நாட்டு தலைவர்களுடன் PM மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். இதனையடுத்து பஹ்ரைன் மற்றும் சவுதி மீதான தாக்குதலை கண்டிப்பதாக X தளத்தில் பதிவிட்டுள்ள PM, இந்தியா அவர்களுக்கு துணை நிற்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியர்களுக்கு தேவையான நடவடிக்கை எடுத்த அவர்களுக்கு மோடி நன்றியும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!