News November 17, 2024
பொது அறிவு வினா – விடை

1) உலகிலேயே மிகப்பெரிய பவளப்பாறை எங்குள்ளது? 2) TDS என்பதன் விரிவாக்கம் என்ன? 3) உலக வரலாற்றில் பழமையானதாக கருதப்படும் மரம் எது? 4) ரத்த அழுத்தத்தை அளக்க உதவும் கருவி எது? 5) கிளியின் அறிவியல் பெயர் என்ன? 6) ‘பரதகண்ட புராதனம்’ என்ற நூலின் ஆசிரியர் யார்? 7) உலோகங்களின் அரசன் என அழைக்கப்படுவது எது? 8) ரஷ்ய நாணயத்தின் பெயர் என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.
Similar News
News August 17, 2025
குட் பேட் அக்லி எப்படி இருக்கும்? ஆதிக் பதில்

குட் பேட் அக்லியை தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் புதிய படம் ஒன்றை இயக்கயிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் விருது விழா மேடை ஒன்றில் AK 64 படம் குறித்து ஆதிக்கிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அவர், குட் பேட் அக்லி ரசிகர்களுக்காக பண்ண திரைப்படம், AK 64 கண்டிப்பாக அனைவரும் என்ஜாய் பண்ணக்கூடிய படமாக இருக்கும் என கூறியுள்ளார். இத்தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
News August 17, 2025
உடனே ஓடிவர திமுகவினர் என்ன பழனிசாமியா? ஸ்டாலின்

உறவினர் வீட்டில் ED ரெய்டு என்றால், ஓடிவந்து கூட்டணியில் சேர்வதற்கு நாங்கள் என்ன பழனிசாமியா என CM ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எங்களை மிரட்ட நினைப்பவர்கள் இன்று மிரண்டு போயிருப்பதாகவும் கூறினார். பாஜக ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என எச்சரித்ததோமோ அதுவெல்லாம் நடப்பதாகவும், ஒத்துவராத எதிர்கட்சிகள் ED-யை கொண்டு மிரட்டப்படுவார்கள் என கூறியிருந்தோம் அதுவும் நடப்பதாக கூறினார்.
News August 17, 2025
ஆகஸ்ட் 17: வரலாற்றில் இன்று

1934 – முரசொலி மாறன் பிறந்த தினம்.
1945 – ஜப்பானிடமிருந்து இந்தோனேசியா விடுதலை பெற்ற நாள்.
1947 – இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிளிஃப் கோடு வெளியிடப்பட்டது.
1962 – விசிக தலைவர் திருமாவளவன் பிறந்த தினம்.
1963 – திரைப்பட இயக்குநர் சங்கர் பிறந்த தினம்.
2008 – அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் ஃபெல்ப்ஸ் ஒரே ஒலிம்பிக் போட்டியில் 8 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.