News November 17, 2024

தனுஷ்- நயன் மோதல்: வெளியான புது தகவல்!

image

‘நானும் ரவுடி தான்’ பட காட்சிகள், பாடலை நயனின் ஆவணப்படத்தில் பயன்படுத்திவிட்டு அதன் பிறகு அனுமதி கேட்டதால், தனுஷ் அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், போனில் எடுத்த பட காட்சிகளை நயன் தரப்பு பயன்படுத்தியதால், தனுஷ் மேலும் கோபமடைந்துள்ளார். அத்துடன், பிரபலங்கள் பலரிடம் இருந்து அழுத்தம் தரப்பட்டதால் வெறுப்படைந்த தனுஷ், சட்டரீதியாக நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

Similar News

News March 5, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News March 5, 2026

யூரியா உற்பத்தி குறைந்தது.. விலை உயருமா?

image

மத்திய கிழக்கில் நடந்த போர் காரணமாக கத்தாரில் LNG உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், இந்தியாவில் யூரியா உற்பத்தியை நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. LNG எரிசக்திக்கு மட்டுமல்லாமல், யூரியா உற்பத்திக்கும் முதன்மை மூலப்பொருளாக உள்ளது. யூரியா பற்றாக்குறை ஏற்பட்டால், விலைகள் உயர வாய்ப்புள்ளது. இருப்பினும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக உர அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

News March 5, 2026

OMG! ரொம்ப நேரம் உட்கார்ந்தா, இப்படி ஒரு ஆபத்தா…

image

அலுவலகமோ வீடோ, நீண்டநேரம் அமர்ந்து வேலை செய்வதால் பல்வேறு நோய்கள் வரும் என்கின்றனர் டாக்டர்கள்: *உடல்பருமன் *இதயநோய் & சில வகை புற்றுநோய்கள் *ரத்த சர்க்கரை *தொப்பை & இடுப்பை சுற்றி கொழுப்பு சேர்வது *முதுகு-கழுத்து வலி *தொடை தசைகள் பலவீனமாதல் *ஜீரண பிரச்சனை போன்றவை ஏற்படலாம். இவற்றை தவிர்க்க 30 mins-க்கு ஒருமுறை எழுந்து நடக்கலாம், எளிதான உடற்பயிற்சிகள் (வாரம் 150 mins) அவசியம்.

error: Content is protected !!