News November 17, 2024
திருச்செந்தூர் பீச்சில் பிரம்மாண்ட நிலவை ரசித்த பக்தர்கள்
பௌர்ணமி முடிந்த 2ஆம் நாளான நேற்று(நவம்பர் 16) இரவு திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் பௌர்ணமி நிலவு தரிசனம் மேற்கொண்டனர். பிரமாண்ட நிலவு மாலை 6.30 மணிக்கு மேல் தோன்றியது. இதைக் காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருச்செந்தூர் கடற்கரையில் திரண்டனர். நிலவு தோன்றியதும் அதைப் பலர் படம் பிடித்து ரசித்த வண்ணம் இருந்தனர்.
Similar News
News November 19, 2024
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(நவ.,19) காலை 7 மணி வரை பெய்த மழை அளவு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக குலசேகரப்பட்டினத்தில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. திருச்செந்தூர் 15, காயல்பட்டினம் 13, கயத்தாறு 10 மில்லி மீட்டர் மழை பெய்தது. ஓட்டப்பிடாரம் 4.50m சாத்தான்குளம் 3.40, மில்லி மீட்டர் கடம்பூர் வைப்பார் தலா 3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
News November 19, 2024
தூத்துக்குடியில் சைபர் மோசடி: உடனே ‘1930’-க்கு CALL பண்ணுங்க!
தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் கிரைம் பண மோசடியில் சிக்கி பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை நேற்று(நவ.,18) வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், இணையதளங்களில் வரும் போலியான பண மோசடி விளம்பரங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். இணையதள மோசடியில் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டால் உடனடியாக ‘1930’ என்ற எண்ணுக்கு அழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
News November 19, 2024
தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை!
தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(நவ.,19) விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் கலெக்டர் தெரவித்துள்ளார். தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.