News November 17, 2024
புதுவையில் தேர்வு தேதி அறிவிப்பு

புதுவை மண்டல தீயணைப்புத் துறை அதிகாரி இளங்கோவன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தீயணைப்புத் துறையின் வாகன ஓட்டுநா் நிலை 3 பணிக்கான வாகன இயக்கும் தோ்வுகள் நவம்பா் 23, 30 மற்றும் வரும் டிசம்பா் 1, 8 ஆகிய தேதிகளில் வாகனங்களை இயக்கிக் காட்டும் தோ்வு நடைபெறவுள்ளது. காா் இயக்கும் தோ்வானது புதுச்சேரி மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Similar News
News September 13, 2025
புதுச்சேரி: உரிமம் பெறாத விடுதிகளுக்கு சீல்

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “உரிமம் பெற்று புதுப்பிக்கப்படாமல் உள்ள தங்கும் விடுதிகள், வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்கள் தங்களுடைய உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. உரிமத்தை புதுப்பிக்காத தங்கும் விடுதி, வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 13, 2025
ஃபாஸ்ட் ஃபுட் உணவை தவிர்க்க வேண்டும்-ஆளுநர்

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை
தேசிய ஊட்டச்சத்து மாதம் தொடக்க விழா கம்பன் கலை அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன்,
“தவறான உணவு பழக்க வழக்கம் அதிகமான சர்க்கரை, உப்பு, எண்ணெய்களால் தயாரிக்கப்படும் ஃபாஸ்ட் புட் உணவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் இது தவிர்க்கப்பட வேண்டும்.” என்று அறிவுறுத்தினார்.
News September 13, 2025
வாக்குச்சாவடி மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் புதுச்சேரி தலைமைத் தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் அரியாங்குப்பம் மற்றும் மனவேலி தொகுதி சட்டமன்றத் தொகுதியின் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் சார்பில் கலந்து கொண்டு வாக்குச்சாவடி மறுசீரமைப்பு ஆலோசனை வழங்கப்பட்டது .