News November 17, 2024

14 பதக்கங்கள் வென்ற திருப்பூர் மாணவ-மாணவிகள்

image

ஈரோட்டில் நடந்த மாநில தடகளப் போட்டியில், திருப்பூர் மாவட்ட வீரர், வீராங்கனைகள் இரண்டு தங்கம் உள்பட 14 பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளனர். நவ 6 முதல் 8ஆம் தேதி மாணவருக்கும், 9 முதல் 11ஆம் தேதி வரை மாணவியருக்கும் மாநில தடகளப் போட்டி நடந்தது. மாவட்ட தடகள போட்டியில் அசத்திய 70க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் மாநில போட்டியில் பங்கேற்றனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்தன.

Similar News

News August 24, 2025

சிசிடிவி கேமரா பொருத்த போலீசார் அறிவுரை

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள், குடியிருப்புகள், தோட்டத்து சாலைகள், ஆகிய பகுதிகளில் திருட்டு, கொலை, கொள்ளை, நடக்காமல் இருக்க பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகள் தோட்டத்து சாலைகள் முதியவர்கள் குடியிருக்கும் வீடுகளில் CCTV கேமராக்கள் பொருத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 24, 2025

திருப்பூர்: குறைந்த விலையில் பைக், கார்!

image

திருப்பூரில் காவல்துறையால் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 4 மற்றும் 2 சக்கர வாகனங்கள் என மொத்தம் 35 வாகனங்கள் ஏலக்குழுவினரால் வரும் ஆகஸ்ட்.26 காலை 10 மணியளவில் ஏலம் விடப்பட உள்ளது. அவினாசி, மடத்துபாளையம் ரோடு. சிவக்குமார் ரைஸ்மில் காம்பவுண்டில் உள்ள திருப்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் நடைபெறும் ஏலத்தில், விருப்பமுள்ளவர்கள் ஆதார் அட்டையுடன் விண்ணப்பிக்குமாறு காவல்துறை அறிவிப்பு.

News August 24, 2025

காங்கேயத்தில் குடும்ப பிரச்சனையில் பெண் தற்கொலை

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த சிவன்மலை சரவணா நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (28). இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் சுபாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, ஜெயலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!