News November 17, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை..

தமிழகத்தில் காலை 10 மணிக்குள் 11 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம், விழுப்புரம், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?
Similar News
News August 28, 2025
நடிகர் அஜித் எடுக்கப்போகும் புது அவதாரம்?

FANBOY அடைமொழியோடு தங்களது புகழ்பாடிகளையே பெரும்பாலான ஹீரோஸ் டைரக்டர்களாக நியமித்து வருகின்றனர். GBU படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், தன்னுடைய அடுத்த பட டைரக்டர் ஆதிக் தான் என அஜித் உறுதியாக இருக்கிறாராம். ஆனால், இந்த கூட்டணிக்கு தயாரிப்பாளர்தான் கிடைக்கவில்லை. நான்கைந்து கம்பெனிகள் இந்த கூட்டணியை நிராகரித்துவிட்டதால், Production House ஆரம்பிக்க அஜித் யோசிப்பதாக கூறப்படுகிறது.
News August 28, 2025
லோன் .. வெளியானது ஹேப்பி நியூஸ்

தெருவோர கடைக்காரர்களுக்கான PM Svanidhi கடன் திட்டத்தில் வழங்கப்படும் தவணைக் கடன் ₹5,000 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வரும் 2030-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல் தவணை கடன் வரம்பு ₹15,000-ஆகவும், 2-ம் தவணை ₹25,000-ஆகவும், 3-ம் தவணை ₹50,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. உரிய காலத்தில் தவணையை செலுத்தினால் சில சலுகைகளும் அளிக்கப்படுகிறது.
News August 28, 2025
Uncle என விஜய் அழைத்தது சரிதான்.. K.S.ரவிக்குமார்

தவெக மாநாட்டில் முதல்வரை ‘ஸ்டாலின் Uncle’ என விஜய் கூறியதற்கு தொடர்ந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்நிலையில், Uncle என விஜய் அழைத்ததில் தவறில்லை என இயக்குநர் K.S.ரவிக்குமார் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் கூட அவரை பார்க்கும்போது ‘வணக்கம் Uncle’ என்றே பேசுவதாக குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இது அரசியல் நாகரிகமற்றது என பல்வேறு கட்சியினரும் கூறி வருகின்றனர்.