News November 17, 2024
2ஆவது நாள் வாக்காளர் சிறப்பு முகாம்

சேலத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் 2ம் நாள் நடைபெறுகிறது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் வாக்காளர்கள், ஆதார் எண் இணைப்பவர்கள், பெயர் நீக்கம், பெயர், வயது, பாலினம், கதவு எண், முகவரி பதிவுகளில் திருத்தம் செய்வதற்கும், தொகுதிக்குள்ளேயே வசிப்பிடம் மாற்றுதல் போன்ற பணிகளுக்கு தங்கள் பகுதியில் உள்ள ஓட்டுசாவடிகளில் இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் திருத்தங்கள் செய்யலாம்.
Similar News
News March 6, 2026
சேலம் ஓமலூர் அருகே பயங்கரம்!

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது இடது பக்க இடுப்பு, வலது பக்க விலா எலும்பில் மச்சம் உள்ளது. அவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. ரெயில்வே போலீசார் வாலிபர் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 6, 2026
அறிவித்தார் சேலம் கலெக்டர்!

சேலம் மாவட்டத்தில் இரத்த சோகை விழிப்புணர்வு மற்றும் சிறுதானிய உணவுத் திருவிழா மார்ச் 10-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது. முன்னதாக மார்ச் 7-ல் ஊராட்சிகளிலும், 9-ல் வட்டாரங்களிலும், மார்ச் 9 மற்றும் 12-ல் விற்பனை கண்காட்சிகளும் நடைபெறவுள்ளது. இதில் விற்பனையாளர்களுக்குக் கட்டணம் கிடையாது. பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என சேலம் கலெக்டர் அறிவித்துள்ளார்.
News March 6, 2026
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அப்பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்.05) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


