News November 17, 2024

2026ல் கூட்டணி ஆட்சி தான்: அன்புமணி

image

2026 தேர்தலில் சூழல் மாறலாம், கூட்டணியும் மாறலாம் என தமிழிசை செளந்தரராஜன் கூறியது குறித்து, அக்கூட்டணியில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, 2026ல் கூட்டணி ஆட்சிதான் அமையும், அந்த கூட்டணியில் பாமக இருக்கும் என்று அவர் உறுதியாக பதிலளித்துள்ளார். இதன் மூலம் பாமக புதிய கூட்டணிக்கு அச்சாரமிடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Similar News

News March 1, 2026

அஜித் பவார் மரணம்.. திடுக்கிடும் தகவல்

image

<<18987395>>அஜித் பவார்<<>> மரணத்திற்கு விமானியின் அலட்சியமே காரணம் என புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. விமானம் தரையிறங்க குறைந்தபட்சம் 5,000 மீட்டர் பார்வைத்திறன் அவசியம்; ஆனால் 3,000 மீட்டர் மட்டுமே தெரிந்தபோதும் விமானத்தை தரையிறக்க முயன்றதே விபத்துக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானி ‘அய்யோ.. அய்யோ..’ என அலறிய சத்தம் கருப்புப் பெட்டியில் பதிவாகி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 1, 2026

இன்னும் 1000 இடங்களில் தாக்குதல் நடக்கும்: இஸ்ரேல்

image

ஈரானில் வரும் நாள்களில் ஆயிரக்கணக்கான இலக்குகளை தாக்குவோம் என இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். ஈரானின் துணிச்சலான மக்கள் கொடுங்கோல் ஆட்சியின் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கான சூழலை இஸ்ரேல் உருவாக்கும் என கூறியுள்ளார். ஈரான் குடிமக்களே, இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்; இது ஒரு தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு எனவும் கூறியுள்ளார்.

News March 1, 2026

சமூகநீதிக்கும் ஸ்டாலினுக்கு சம்பந்தம் இல்லை: அன்புமணி

image

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரத்தை கொடுத்தவர் PM மோடி என அன்புமணி தெரிவித்துள்ளார். NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாஜக ஆளும் பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதற்கேற்ப நலத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், சமூகநீதிக்கும் ஸ்டாலினுக்கு சம்பந்தம் இல்லை என்றும், சமூகநீதி என்றாலே PM மோடிதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!