News November 17, 2024

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியா வெற்றி

image

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் சீனாவை (3-0) வீழ்த்தி இந்திய பெண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் சங்கீதா குமாரும், 37-வது நிமிடத்தில் கேப்டன் சலிமா டேடேவும் கோல் அடித்தனர். கடைசி நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி தீபிகா கோல் அடித்தார். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற சீனாவை இந்திய அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 2, 2026

தவெகவுடன் கூட்டணியா? திமுகவுக்கு பதற்றம்

image

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு திமுக ஆஃபர் அளித்த 25 தொகுதிகளை ஏற்க முடியாது என கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார். தவெகவை குறைத்து மதிப்பிட முடியாது; காங்., பலத்தை தவெக அறிந்துள்ளது என்றும் பேசியுள்ளார். இது சீட்களை உயர்த்துவதற்கான ஸ்ட்ரேட்டஜி என விமர்சகர்கள் கூறுகின்றனர். ஒருவேளை மீண்டும் தவெகவுடன் காங்., இணைய முனைப்பு காட்டுகிறதோ என்ற பேச்சு திமுக தரப்புக்கு சற்று பதற்றத்தை கொடுத்துள்ளதாம்.

News March 2, 2026

இன்று மாசி மகம்: இதை செய்ய மறக்காதீர்கள்!

image

மகம் நட்சத்திரமும், பௌர்ணமியும் இணையும் நாளே மாசி மகம். இன்று காலை 8:17 மணிக்கு தொடங்கி நாளை காலை 8:07 மணி வரை மகம் நட்சத்திரம் உள்ளது. இந்த நேரத்தில், கோயில்களில் உள்ள நீர் நிலைகளில் நீராடினால் ஒருவரின் கர்மவினைகள் நீங்கி செல்வ செழிப்பு பெருகி, ஆரோக்கியம் பெருகும் என நம்பப்படுகிறது. மேலும், புதிய விஷயங்கள் தொடங்குதல், தர்ம காரியங்கள் செய்வது போன்றவை இந்த நாளில் அதிக பலனைத் தருமாம். SHARE IT.

News March 2, 2026

தொகுதிப் பங்கீடு.. அதிமுக கூட்டணியில் இழுபறியா?

image

NDA தலைவர்கள் கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியானது. அத்துடன் அன்புமணி பாமகவுக்கு 17 தொகுதி + 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் தொகுதி பங்கீடு பற்றி பேசவில்லை என்றும், PM மோடி பங்கேற்கும் அடுத்த சில மாநாடுகள் குறித்து ஆலோசித்ததாகவும் பியூஷ் கோயல் கூறியுள்ளார். சில கட்சிகள் அதிக சீட் கேட்பதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லையாம்.

error: Content is protected !!