News November 17, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News August 28, 2025
Health Tips: இஞ்சி டீ குடிப்பதால் இத்தனை பிரச்னைகளா?

இஞ்சி டீ-யில் மருத்துவ குணங்கள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது சில பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இஞ்சியின் தினசரி பயன்பாடு 4 கிராமுக்கு மேல் சென்றால் வயிற்றுப்போக்கு, தூக்கமின்மை பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், பித்த நீர் அதிகமாக சுரக்கும் என்பதால் பித்தப்பை கல் பிரச்னை உள்ளவர்கள் இஞ்சி டீயை தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.
News August 28, 2025
BREAKING: அடுத்தடுத்து விஜய் ரசிகர்கள் மரணம்

தவெக மாநாட்டிற்கு முன்பும், பின்பும் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். வேலூரை சேர்ந்த மதன், நண்பர்களுடன் மாநாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது சாப்பிட சென்றுள்ளார். அப்போது மதன் காணாமல் போன நிலையில், கரூர் அரவக்குறிச்சியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் 22-ம் தேதி விபத்தில் உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. தவெக தொண்டர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பதால் கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
News August 28, 2025
2 நாளில் முதல் சாதி மறுப்பு திருமணம்

CPI(M) அலுவலகத்தில் காதல் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பெ.சண்முகம் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, திருத்துறைப்பூண்டியில் உள்ள CPI(M) அலுவலகத்தில் காதலர்கள் சஞ்சய்குமார் – அமிர்தா ஆகியோருக்கு முதல் சாதி மறுப்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிகழ்வில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். மேலும், சாதி மறுப்பு திருமணம் செய்த இந்த தம்பதிக்கு பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தியுள்ளனர்.