News November 17, 2024

ஃபோனுக்கு அடிமையானதால் தந்தை வெறிச்செயல்

image

ஃபோனுக்கு அடிமையான மகனை கிரிக்கெட் பேட்டால் அடித்தும், தலையை சுவற்றில் முட்டியும் கொன்ற கொடூர தந்தை குமாரை பெங்களூரு போலீசார், நேற்று கைது செய்தனர். காலை முதல் மதியம் வரை வலியால் துடித்தபோதும் கண்டுகொள்ளதவர், மூச்சு பேச்சு இல்லாத பின்னரே ஹாஸ்பிடலில் சேர்த்துள்ளார். மகன் இறந்ததாக டாக்டர்கள் கூறவே, வேகவேகமாக இறுதி சடங்கு செய்ய முயன்ற குமாரை, தகவல் அறிந்து வந்த போலீசார் தட்டித் தூக்கினர்.

Similar News

News March 10, 2026

மார்ச் 10: வரலாற்றில் இன்று

image

*1922 – பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு பம்பாயில் காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். *1948 – இந்தியாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மதராஸில் தொடங்கப்பட்டது. *1933 – பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த தினம். *1980 – திரைப்படப் பாடலாசிரியர் மதன் கார்க்கி பிறந்த தினம். *1897 – இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்ரிபாய் புலே நினைவு தினம்.

News March 10, 2026

இலங்கை அணியின் கோச் ஆனார் கேரி கிர்ஸ்டன்

image

டி20 WC தொடரில் இலங்கை அணியின் படுதோல்வியை அடுத்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து சனத் ஜெயசூர்யா விலகினார். இதையடுத்து அந்த அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு 2011 இல் உலகக்கோப்பை வென்று கொடுத்த கேரி கிர்ஸ்டன், 2 ஆண்டுகாலத்திற்கு வரும் ஏப்ரல் 14, 2028 வரை தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.

News March 10, 2026

தனிமையில் இருப்பதால் இத்தனை நோய்கள் வருமா?

image

சிலர் எப்போது பார்த்தாலும் தனிமையிலேயே இருப்பார்கள். என்றைக்காவது தனியாக இருந்தால் பிரச்னை கிடையாது. ஆனால், நண்பர்கள், குடும்பத்தினர், பொழுதுபோக்கு என எதற்கும் நேரம் செலவிடாமல் எப்போதுமே தனிமையிலேயே இருப்பது, இதய நோய், ஸ்ட்ரோக், சர்க்கரை போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படுவதாக கேம்பிரிட்ஜ் பல்கலை., ஆய்வில் தெரியவந்துள்ளது. நரம்பு அமைப்பு & ஹார்மோன் சமநிலையை பாதிப்பதால் இந்த பிரச்னைகள் ஏற்படுகிறதாம்.

error: Content is protected !!