News November 16, 2024
Matrimony இனி திருமண கடனும் வழங்கும்..!

அலையாய் அலைந்து வரன் தேடிய அடுத்த நிமிடமே, திருமண செலவுகளுக்கு என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் பெரும்பாலானவர்களின் கேள்வியாக உள்ளது. அவர்களுக்காகவே WeddingLoan.com என்ற கடன் வழங்கும் தளத்தை Matrimony.com அறிமுகப்படுத்தியுள்ளது. IDFC, டாடா கேபிட்டல் உள்ளிட்ட சில நிதி நிறுவனங்களுடன் இணைந்து இந்த சேவையை Matrimony.com வழங்க உள்ளது. இதில் திருமணத்திற்கு தேவையான நிதியை மணமக்கள் பெறலாம்.
Similar News
News August 28, 2025
USல் இந்தியப் பொருள்களின் விலைகள் அதிகரிப்பு

<<17530648>>டிரம்பின் 50% வரி<<>> விதிப்பால் அமெரிக்காவில் இந்தியப் பொருட்களின் விலை 40% – 50% அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் பல அங்கன்வாடிகளில் இது தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு சுமையாக மாறியுள்ளது. நேற்று முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்த நிலையில் இந்திய ஏற்றுமதியாளர்களும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
News August 28, 2025
மேடையில் நடிகருக்கு மாரடைப்பு.. கவலைக்கிடம்!

கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, மலையாள நடிகர் ராஜேஷ் கேஷவ்விற்கு(47) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. கீழே சரிந்து விழுந்த அவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பியூட்டிஃபுல், திருவனந்தபுரம் லாட்ஜ், ஹோட்டல் கலிஃபோர்னியா உள்ளிட்ட பல படங்களில் ராஜேஷ் நடித்துள்ளார்.
News August 28, 2025
வரலாற்றில் இன்று

*1757 – முதலாவது ரூபாய் நாணயம் கல்கத்தாவில் உருவாக்கப்பட்டது
*1891 – திராவிட மொழியியலின் தந்தை, ராபர்ட் கால்டுவெல் நினைவு தினம்
*1965 – நடிகை டிஸ்கோ சாந்தி பிறந்த தினம்
*1982 – நடிகர் பிரசன்னா பிறந்த தினம்
*1983 – முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா பிறந்த தினம்
*2020-காங்கிரஸ் மூத்த தலைவர் H.வசந்தகுமார் நினைவு தினம்