News November 16, 2024

சுப்மன் கில் காயம்?

image

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவரான சுப்மன் கில் காயமடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டித் தொடர் இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், மேற்கு ஆஸ்திரேலிய அணியுடனான பயிற்சி பாேட்டியில் கில் இடது கையில் காயம் ஏற்பட்டதாகவும், இதனால் 2ஆவது நாள் ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News March 5, 2026

கிறிஸ்டோபர் திலக்கிற்கு ராஜ்யசபா சீட் எப்படி வந்தது?

image

திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், தங்கபாலு போன்றோர் ராஜ்யசபா சீட் கேட்டு டெல்லியில் முகாமிட்டனர். ஆனால், காங்., தலைமையோ, சீனியர்களை விட, தற்போது தமிழ்நாட்டிற்கு புதிய தலைவரை அடையாளப்படுத்த விரும்பியது. இதனால், ராகுலுக்கு நெருக்கமான கிறிஸ்டோபர் திலக்கிற்கு ராஜ்யசபா சீட் கொடுத்துள்ளது. இனிவரும் காலங்களில் டெல்லியில் தமிழகத்தின் குரலாக இவர் ஒலிப்பார் என்றும் கூறப்படுகிறது.

News March 5, 2026

ஒரேநாளில் ₹30,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

1 கிராம் வெள்ளி இன்று (மார்ச் 5) மாற்றமின்றி ₹295-க்கும், 1 கிலோ ₹2.95 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. இம்மாத தொடக்கத்தில் 1 கிலோ வெள்ளி ₹3.25 லட்சமாக இருந்த நிலையில், நேற்று ஒரேநாளில் ₹30,000 அளவுக்கு குறைந்து ₹2.95 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெள்ளி நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் நாள்களிலும் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News March 5, 2026

ஹோட்டல் பணிப்பெண் தவறாக நடந்த பாகிஸ்தான் வீரர்!

image

PAK கிரிக்கெட் வீரர் ஒருவர் மோசமான சர்ச்சையில் சிக்கியுள்ளார். இலங்கையின் கண்டி பகுதியில் T20I WC-க்காக தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த அவர், ஹோட்டல் பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது. அச்சத்தில் அப்பெண் கத்தி கூச்சலிட்டதில், ஹோட்டல் ஊழியர்கள் அவரை மீட்டதாக கூறப்படுகிறது. அந்த வீரர் சார்பில் அவரது மேனஜர் மன்னிப்பு கேட்டாலும், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!