News November 16, 2024
சீனியர் வீரர்கள் காயம்.. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு?

BGT தொடருக்கு முன்பாக இந்திய அணியின் வீரர்களுக்கு அடுத்தடுத்து காயம் ஏற்பட்டது கவலை அளிக்கிறது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா- ஏ அணி வீரர்களான சாய் சுதர்ஷன் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரை ஆஸ்திரேலியாவில் தங்கவைக்க BCCI திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. BGTல் ரோஹித் இல்லாத நிலையில், KL ராகுல் மற்றும் கில் காயமடைந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
Similar News
News April 3, 2026
திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

தேர்தலையொட்டி புதுச்சேரியில் ஏப்.7 முதல் 10-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. தற்போது, மாணவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக மேலும் ஒருநாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்.6 (திங்கள்கிழமை) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால், அடுத்த வாரம் முழுவதும் பள்ளிகள் இயங்காது என கல்வித் துறை தெரிவித்துள்ளது. SHARE IT
News April 3, 2026
ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படும் ECI: வீரபாண்டியன்

மத்திய அரசின் தலையீட்டால் தமிழ்நாடு டிஜிபி மாற்றப்பட்டுள்ளதாக CPI மாநில செயலாளர் வீரபாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவுக்கு ஆதரவாக ECI செயல்படுவது ஜனநாயகத்துக்கு எதிரானது என அவர் சாடியுள்ளார். இத்தகைய பாரபட்சமான போக்கை கைவிட்டுவிட்டு, மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதை ECI தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.. <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
காங்., வேட்பாளர் பட்டியல் வெளியானது

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் – செல்வப்பெருந்தகை, பொன்னேரி – துரை சந்திரசேகர், வேளச்சேரி – ஹசன் மெளலானா, சோளிங்கர் – முனிரத்னம், ஊத்தங்கரை – குப்புசாமி, கிருஷ்ணகிரி – செல்லக்குமார், பென்னாகரம் – ஜி.கே.எம்.தமிழ்க்குமரன், ஆத்தூர் – அர்த்தநாரி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். <<-se>>#TNElection2026<<>>


