News November 16, 2024

தமிழ் திரைப்பட இயக்குநர் சுரேஷ் சங்கையா மறைவு

image

ராஜபாளையம் அருகே கரிசல்குளத்தை சேர்ந்தவர் சுரேஷ் கங்கையா. இவர் 2017 இல் ஒரு கிடாயின் கருணை மனு,சத்தியசோதனை படத்தை இயக்கியுள்ளார். ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் விமரிசன ரீதியாக கவனம் பெற்றது. இந்த நிலையில், கல்லீரல் செயலிழப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்த சுரேஷ் சங்கையா, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News March 7, 2026

விருதுநகர்: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <>இங்கு க்ளிக்<<>> செய்து, Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News March 7, 2026

சிவகாசியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு

image

சிவகாசி பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டாசு தயார் செய்வதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனை அடுத்து, சிவகாசி பகுதி மாரனேரி சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் கிளியம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது முத்துப்பாண்டி (42) என்பவர் அவருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தது தெரிய வந்தது. இதனை அடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் முத்துபாண்டியை கைது செய்தனர்

News March 7, 2026

விருதுநகர்: விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.71 கோடி வரவு!

image

விருதுநகர் மாவட்டத்தில் 3,560 விவசாயிகளின் வங்கி கணக்கில் இதுவரை ரூ.71 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் விருதுநகர் மண்டலத்தில் 2025-26 காலகட்டத்தில் 34 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு கடந்த 4-ம் தேதி வரை 29,796 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு மொத்தம் ரூ.71,01,20,229 வரவு வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்

error: Content is protected !!