News November 16, 2024
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருப்பூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளன.
Similar News
News March 12, 2026
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேர் திருவிழா

அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில் சித்திரை தேர்த்திருவிழா வரும் ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய தேரான அவிநாசி தேர், இத்திருவிழாவின் முக்கிய அம்சமாகும். இத்திருவிழாவில் திரளான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு தெய்வ தரிசனம் பெற்றுச் செல்லுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
News March 12, 2026
திருப்பூரில் தேர்தல் தொடர்பான ஆய்வு கூட்டம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் மனிஷ் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஊடகச் சான்றளிப்பு, பறக்கும் படை மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுவினரின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநகர மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
News March 12, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (மார்ச்.11) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.


