News November 16, 2024
BREAKING: நடிகை கஸ்தூரி கைது!

நடிகை கஸ்தூரியை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தெலுங்கு மக்களை மிக இழிவாக பேசிய அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டன. இதையடுத்து, அவரது முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் கைது பயத்தில் கஸ்தூரி தலைமறைவானார். அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், ஹைதராபாத்தில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் சென்னை கொண்டு வரப்படுகிறார்.
Similar News
News March 13, 2026
BREAKING மானாமதுரை ஆகாஷ் உடலில் 28 காயங்கள்..!

மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழந்த விவகாரத்தில், ஆகாஷ் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. வலது கால் நடுப்பகுதி தசை, முழங்கை, முழங்கால், மூளை அடிப்பகுதியில் ரத்த கசிவு, நுரையீரல் வீக்கம் உட்பட 28 இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் தாக்குதலில் ஆகாஷ் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
News March 13, 2026
பரபரப்பு ட்விஸ்ட்: திமுக கூட்டணியில் இணைந்தார்

OPS திமுகவில் இணைந்ததை கடுமையாக விமர்சித்த பெங்களூரு புகழேந்தி, இன்று திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதிமுக பிளவுக்கு பிறகு OPS அணியில் இருந்த அவர், ‘புரட்சி அதிமுக’ என்ற கட்சியை தொடங்கினார். சமீபகாலமாக விஜய்க்கு ஆதரவாக பேசி வந்ததால், தவெக கூட்டணிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
News March 13, 2026
CSK மீது புகார் அளித்துள்ள SUN Network!

தோனியை ரஜினியுடன் ஒப்பிட்டு மாஸாக CSK வெளியிட்டு வரும் விளம்பரங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில்தான், CSK-வுக்கு ஷாக் கொடுத்துள்ளது சன் டிவி நெட்வொர்க். இனி CSK விளம்பரங்களில் ஜெயிலர், கூலி பட பாடல்களை உபயோகிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என சன் டிவி நெட்வொர்க் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒருவேள SRH-க்கு யூஸ் பண்ண போறாங்களோ?


