News November 16, 2024
திருவண்ணாமலையில் அலைமோதிய மக்கள் கூட்டம்

கார்த்திகை முதல் நாளான இன்று திருவண்ணாமலையில் புகழ் பெற்ற அண்ணாமலையார் கோவிலில் காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகைபுரிந்தனர். இதனால், போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டதுடன் திருவண்ணாமலை நகரம் முழுவதுமே மக்கள் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 4, 2026
தி.மலையில் பொதுமக்கள் குறைத்தீர்வு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் M.சுதாகர் தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுக்களாக வழங்கினர்.
News March 4, 2026
தி.மலை: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

தி.மலை மாவட்ட மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News March 4, 2026
அறிவித்தார் தி.மலை கலெக்டர்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் இளைஞர்கள் சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுனர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களாகவும், 18 முதல் 32 வயது வரை நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.


