News November 16, 2024

சந்திரபாபு நாயுடு தம்பி காலமானார்

image

சந்திரபாபு நாயுடுவின் தம்பி ராமமூர்த்தி நாயுடு (72) காலமானார். நீண்ட நாள்களாக நோயால் அவதிப்பட்ட அவருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், கடந்த 14ஆம் தேதி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்ததார். 1994-ல் சந்திரகிரி தொகுதியில் இருந்து TDP எம்எல்ஏவாக ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News March 3, 2026

‘கூட்டணியிலிருந்து விலகுங்கள்’.. மதிமுகவில் குமுறல்

image

2021-ல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக 4-ல் வெற்றிபெற்றது. இம்முறை ECI-ன் அங்கீகாரத்தை மீண்டும் பெற 12 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட், தனி சின்னம் கோரிக்கைகளை வைகோ முன்வைத்ததாக தெரிகிறது. ஆனால், உதயசூரியன் என்றால் 4, தனி சின்னம் என்றால் 3 தொகுதிகள் என திமுக சொல்லிவிட்டதாம். இதை ஏற்க முடியாத <<19223088>>மதிமுக <<>>தொண்டர்கள் சிலர், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுங்கள் என வைகோவிடம் கூறியுள்ளார்களாம்.

News March 3, 2026

மார்ச் 6-ல் அதிமுக தொகுதிப்பங்கீடு அறிவிப்பா?

image

யாருக்கு ராஜ்யசபா எம்பி பதவியை வழங்குவது, தொகுதிப்பங்கீடு உள்ளிட்டவை குறித்து நாளை அதிமுக மா.செ.க்களின் கருத்துகளை EPS கேட்கவிருக்கிறார். ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 5-ம் தேதியுடன் முடியும் நிலையில், யாருக்கு MP பதவி வழங்குவது என 4-ம் தேதி அறிவிக்கவிருப்பதாகவும், மார்ச் 6-ம் தேதி தொகுதிப்பங்கீட்டு பட்டியல் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

News March 3, 2026

மகளிர் உரிமைத் தொகை.. ஸ்டாலின் மகிழ்ச்சி செய்தி

image

மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட பல முத்திரைத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தும் வேறு மாநில அரசு நாட்டிலேயே நிச்சயமாக இருக்க முடியாது என்று CM ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதுபோன்ற திட்டங்களை சிறிய குளறுபடி இல்லாமல் சரியாக செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். இதனிடையே, உயர்த்தப்பட்ட தொகை ₹2,000, திமுக ஆட்சி அமைந்தால் ஜூனில் இருந்து வரவு வைக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!