News November 16, 2024
சாதனை மாணவர்களுக்கு மயிலாடுதுறை எஸ்பி வாழ்த்து

மயிலாடுதுறையைச் சேர்ந்த சகோதர-சகோதரி அஸ்வின் மற்றும் அஸ்விதா ஆகியோர் தேசிய மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். இதற்காக கடந்த 14-ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இருவருக்கு விருது வழங்கி சிறப்பித்தார். இதனிடையே மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.ஸ்டாலின் சாதனை புரிந்த மாணவர்களை நேரில் அழைத்து இன்று பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
Similar News
News March 8, 2026
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சமூக ஊடக பாதுகாப்பு குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர். அதில், பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் பகிர வேண்டாம், உங்களின் OTP, PIN , CVV, வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை யாரிடமும் பகிரக்கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தயங்காமல் புகார் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
News March 8, 2026
மயிலாடுதுறை: ரயில்வே தேர்வுக்கு இலவச பயிற்சி

ரயில்வே ஆன்சேர்ப்பு வாரியம் 22,195 உதவியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மேற்கண்ட ரயில்வே தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. இதற்கு நேரில் சென்று விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE
News March 7, 2026
மயிலாடுதுறை மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

மயிலாடுதுறை மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <


