News November 16, 2024
சிவகங்கை மாவட்ட எஸ்பி செய்தியாளர்களுக்கு வாழ்த்து

தேசிய செய்தியாளர்கள் தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட எஸ்பி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; உண்மையை எப்போதும் உயர்த்திக் கொள்ளும் தங்கள் அர்ப்பணிப்பு,பொதுநலனைப் பாதுகாக்கும் மீடியாவின் செயற்பாடுகளுக்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கின்றது என்றும் அரசு மற்றும் மக்களுக்கு இடையிலான உறவினை வலுப்படுத்தும், பொறுப்புணர்வுடனான செய்தியாளர்களாக திகழும் தங்களின் பணி பாராட்டுக்குரியது என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News March 3, 2026
சிவகங்கை: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க..
News March 3, 2026
காரைக்குடியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக சிவகங்கை மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஜோன்ஸ் ரூசோ நேற்று (மார்ச் – 02) சென்னை அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தார். உடன் கட்சியைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான திமுக ஆதரவாளர்கள் இருந்தனர்.
News March 3, 2026
சிவகங்கை: தீ விபத்தில் கருகிய 30 உயிர்கள்

காளையார் கோவில் அருகே உள்ள நல்லேந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி சுதாகர். இவர் சாலைக்கிராமம் அருகே உள்ள குறிச்சி கிராம வயல் பகுதிகளில் ஆட்டு கிடை அமைத்துள்ளார். இவரது கிடை அருகில் உள்ள வயல்களில் திடீரென தீ பற்றியதைத் தொடர்ந்து பலத்த காற்றினால் சுதாகர் கிடை அமைத்திருந்த வயலிலும் தீ பரவியதால் அங்கு பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 30 க்கும் மேற்பட்ட ஆடுகள் தீயில் கருகி பலியாகின.


