News November 16, 2024
அகில இந்திய வானொலி நிலையத்தில் பணி புரிய வாய்ப்பு

தர்மபுரியில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் பகுதி நேர அறிவிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் (RJ) தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் 20 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இடைநிலை பட்டம் பெற்றதாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 31/11/2024 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 4, 2026
தருமபுரி: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

தருமபுரி மாவட்ட மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58, 514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News March 4, 2026
பாப்பிரெட்டிப்பட்டி: 7 புதிய வீடுகள் திறப்பு

பாப்பிரெட்டிப்பட்டி பூதநத்தம் ஊராட்சியில் தனியார் அறக்கட்டளை சார்பில் புதிதாக 7 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதனை நேற்று மாவட்ட ஆட்சியர் சதீஸ், அறக்கட்டளைத் தலைவர் ஸ்வரன் சிங் முன்னிலையில் திறந்து வைத்தார். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அரசுத் துறை அலுவலர்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
News March 4, 2026
தருமபுரி: ஆற்றில் குளித்தவர் சடலமாக மீட்பு

ஒகேனக்கல்: திருக்கோவிலுார் அருகே உள்ள பெருமணம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், 24. ஓசூரிலுள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஞாயிறு அன்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார். அங்கு தடை செய்யப்பட்ட கோத்திக்கல் பரிசல் துறை அருகே குளித்து கொண்டிருந்தபோது ஆற்றில் மூழ்கினார். இந்நிலையில் நீண்ட தேடுதலுக்கு பிறகு அதே பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை.


