News March 21, 2024

விழுப்புரம்: ஒரு அரசியல்வாதிகூட எட்டிப் பார்க்கவில்லை

image

விழுப்புரம் மக்களவை (தனி) தொகுதி வேட்புமனு தாக்கல் நேற்று (மார்ச் 20) துவங்கியது. மக்களவை தனித் தொகுதியான விழுப்புரத்தில் நேற்று தேர்தல் அலுவலர் காலை 11 மணி முதல் 3 மணி வரை காத்திருந்தார். ஆனால் மனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை. மனு தாக்கல் நேற்று முதல் வரும் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 28ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை, 30ஆம் தேதி வாபஸ் பெற கடைசி நாள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News August 11, 2025

பெண்ணுக்கு பாலியல் தொல்லை; இளைஞர் கைது

image

சென்னை, பூந்தமல்லியை சேர்ந்த கலையரசன், 20. இவர், விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார். இந்நிலையில் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை வைத்து, அந்த பெண்ணிடம் ஆசைக்கு இணங்க வேண்டும், இல்லையெனில் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து பெண் அளித்த புகாரில், கண்டாச்சிபுரம் போலீசார், கலையரசனை நேற்று கைது செய்தனர்.

News August 11, 2025

விழுப்புரம்: மத்திய அரசு வேலை.. கடைசி வாய்ப்பு

image

BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள ஃபிட்டர், வெல்டர்,மெக்கானிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 515 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இப்பணியிடங்களுக்கு 10th மற்றும் ITI/NAC முடித்த 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அடிப்படை சம்பளம் ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து நாளைக்குள் (ஆக.12) விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News August 11, 2025

அன்புமணி ராமதாஸின் நடைப்பயணம் ஒத்திவைப்பு

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் திண்டிவனத்தில் இன்று (ஆக.11) நடைபெறவிருந்த பாமக தலைவர் அன்புமணியின் நடைபயணம் ஒத்திவைப்பு. இன்று நடைபெறவிருந்த நடைபயணம் நாளை மறுநாள் (ஆக.13) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இது ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் சார்பில் தகவல் வந்துள்ளது. குறிப்பிட்ட நாளில் கண்டிப்பாக நடைபயணம் நடைபெறும் என்று விளக்கம்.

error: Content is protected !!