News November 16, 2024

வீட்டின் மேற்கூரை விழுந்து தொழிலாளி பலி

image

திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல், சீலப்பாடி அணைப்பட்டி பகுதியை சேர்ந்த சின்னதேவர் மகன் போஸ்(54) கூலித் தொழிலாளி. இவர் தனது வீட்டின் திண்ணையில் கட்டிலில் படுத்திருந்தபோது, வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பலியானார்.இது குறித்து தகவல் அறிந்த தாலுகா காவலர்கள் போஸ் உடலை கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News March 2, 2026

திண்டுக்கல்: சொந்த தொழில் தொடங்க SUPER வழி!

image

திண்டுக்கல் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News March 2, 2026

திண்டுக்கல்லில் இடதுசாரி கட்சிகள் ஆலோசனை!

image

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதை கண்டித்து, திண்டுக்கல் மணிக்கூண்டில் நாளை (மார்ச் 3) மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, திண்டுக்கல் சிபிஎம் அலுவலகத்தில் இன்று சிபிஎம், சிபிஐ மற்றும் சிபிஐ (எம்.எல்) உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆர்ப்பாட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

News March 2, 2026

திண்டுக்கல்: 10-வது முடித்திருந்தால் ரூ.56,000 சம்பளம்!

image

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதன்மை தர உறுதி நிறுவனத்தில் MTS (Multi Tasking Staff), LDC (Lower Division Clerk), Superintendent (Stores) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 27.03.2026 ஆகும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!