News November 16, 2024
வள்ளுவர் சிலை குறித்த தகவல் இருப்போர் கவனிக்க

1990 முதல் 1999ம் ஆண்டு வரையுள்ள கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை தொடர்பான வீடியோ காட்சி தரவுகள், புகைப்படங்கள், இருப்பின் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வழங்கலாம். மேலும் 9498042430 என்ற அலைபேசி எண், kkthiruvalluvangrail.com என்ற மின்னஞ்சல் மற்றும் 9488725580 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தரவுகளை அனுப்பலாம் என ஆட்சியர் அழகுமீனா இன்று கூறியுள்ளார்.
Similar News
News March 3, 2026
குமரி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

தபால் அலுவலகத்தில் பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News March 3, 2026
குமரி: பாஜக கவுன்சிலர் உட்பட 12 பேர் மீது வழக்கு

நாகர்கோவில் ஒழுகினசேரி பாலம் பகுதியில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை தொங்கவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் ஐரின் சேகர் கொடுத்த புகாரின் பேரில் நாகர்கோவில் மாநகர பாஜக கவுன்சிலர் சுனில் மற்றும் ராஜா உட்பட 12 பேர் மீது நாகர்கோவில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 3, 2026
நாகர்கோவிலில் பா.ஜ.க.,வினர் மீது வழக்குப் பதிவு

நாகர்கோவிலை அடுத்துள்ள தம்மத்துக் கோணம் சந்திப்பில் உள்ள மின்கம்பத்தில் ராகுல்காந்தியின் உருவ பொம்மை தொங்கவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாஜக நாகர்கோவில் மேற்கு மாநகரத் தலைவர் சதீஷ் உட்பட சிலர் மீது ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


