News November 16, 2024

டி20யில் கிங் என நிரூபித்த அர்ஷ்தீப் சிங்

image

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் எடுத்த வேகபந்துவீச்சாளர் என்ற பெருமையை அர்ஷ்தீப் சிங் பெற்றுள்ளார். லிஸ்ட்டில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 80 போட்டிகளில் 96 விக்கெட்களுடன் முதல் இடத்திலும், அர்ஷ்தீப் சிங் 60 போட்டிகளில் 95 விக்கெட்களுடன் 2வது இடத்திலும், புவனேஷ்குமார் 87 போட்டிகளில் 90 விக்கெட்டுகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

Similar News

News March 21, 2026

QR code-ஐ கண்டுபிடித்தவரை பற்றி தெரியுமா..?

image

டிஜிட்டல் புரட்சிக்கு காரணமான QR code-ஐ கண்டுபிடித்தவர் ஜப்பானின் மாசாஹிரோ ஹரா. கார் கம்பெனியில் வேலை பார்த்த இவர், கார் Spare parts தகவல்களை கூடுதலாக, சேமிக்க வடிவமைத்ததே QR code. ஜப்பானின் ‘Go’ என்ற போர்ட் கேமின் டிசைன்தான் இவருக்கு inspiration. 1994-ல் QR code-ஐ வடிவமைத்த ஹரா, தற்போது உலகம் முழுக்க தனது கண்டுபிடிப்பு பயன்படுத்தப்பட்டாலும், அதற்காக காப்புரிமையோ, பணமோ கேட்டதில்லையாம்.

News March 21, 2026

தங்கம் விலை 10 நாள்களில் சவரனுக்கு ₹10,000 குறைந்தது

image

கடந்த 10 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹10,800 குறைந்து நகைப் பிரியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று 1 சவரன் ₹1,08,960-க்கு விற்பனையாகும் நிலையில், வரும் நாள்களில் மேலும் குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர். போர் பதற்றம் மற்றும் அமெரிக்க Fed Rate நிலைத்தன்மை காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News March 21, 2026

தமிழக தேர்தலை நிறுத்தக் கோரி மனு.. காரணம் என்ன?

image

தமிழக தேர்தலை நிறுத்திவைக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் KK ரமேஷ் என்பவர் SC-ல் மனுதாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, போலீஸாரின் செயல்பாட்டில் திருப்தியில்லை உள்ளிட்ட காரணங்களை அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதுவரை இம்மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தமிழக பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23-ல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!