News November 16, 2024
ராமாபுரம் அருகே கார் கவிழ்ந்து விபத்து

காக்களூர் அருகே உள்ள ராமாபுரம் பகுதியில் ஆவடி – திருவள்ளூர் நெடுஞ்சாலையில் கார் நிலைத்தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காரின் முன் பகுதி சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சிறிது காயங்களுடன் உயிர்த்தப்பினார். மேலும் சாலையோரம் நிறுத்தப்பட்ட பைக் மீது கார் மோதியது. தகவல் அறிந்ததும் செவ்வாபேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 2, 2026
திருவள்ளூரில் பயங்கர தகராறு!

கடம்பத்தூர் அருகே உள்ள பிஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர்(20). இந்நிலையில், நேற்று முன் தினம் சிவசங்கர் வீட்டில் இருந்த போது அங்கு வந்த பிஞ்சிவாக்கம் மேட்டு தெருவைச் சேர்ந்த பாஸ்கர் மற்றும் அவ்ரது உறவினர்களான எட்டியம்மாள், தீபிகா ஆகியோர் ஏற்கனவெ தங்களுக்குள் இருக்கும் முன் பகையை மனதில் வைத்து சிவசங்கரை ததாக்கினர். இதில் சம்மந்தப்பட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
News March 2, 2026
கும்மிடிப்பூண்டி அருகே துடிதுடித்து பலி!

திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் கதிர்(21). இவர், தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த கேசவன்(20) என்பவருடன் நேற்று(மார்ச் 1) ஒரே பைக்கில் தடா நீர் வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். மீண்டும் வரும் போது சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், கதிர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கேசவன், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
News March 2, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.01) இரவு 10 மணி முதல் இன்று காலை (மார்ச்.02) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


