News November 16, 2024

ரேஷன் அட்டைதாரர்கள் இதை இலவசமாக பெறலாம்..

image

தமிழக அரசின் அழுத்தத்தை அடுத்து, கோதுமை ஒதுக்கீட்டை 8,500 டன்னில் இருந்து 17,000 டன்னாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் இதுவரை கோதுமைக்கு நிலவிய தட்டுப்பாடு நீங்கியுள்ளது. இதையடுத்து, ரேஷன் அட்டைதாரர்கள் அரிசிக்கு பதில் கோதுமையை இலவசமாக பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் 5 கிலோவும், மற்ற இடங்களில் 2 கிலோவும் கோதுமை வழங்கப்படுகிறது. SHARE IT.

Similar News

News August 27, 2025

வீரநடை போடும் பி.வி.சிந்து

image

பாரிஸில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பி.வி.சிந்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தார். மகளிர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் அவர், மலேசியாவின் கருப்பதேவனை எதிர்கொண்டார். முதலில் 12-18 என பின்தங்கியிருந்த சிந்து, அதன் பிறகு சிறப்பாக ஆடி 21-19, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

News August 27, 2025

சண்டை போட்டாலும் சேர்ந்தே பயணித்தாக வேண்டும்: USA

image

இந்தியா – அமெரிக்கா இடையில் சிக்கலான உறவு நீடிப்பதாக அமெரிக்க கருவூலத்துறை செயலாளர் ஸ்காட் பெஸண்ட் தெரிவித்துள்ளார். இருப்பினும் இரு நாட்டு தலைவர்களும் நட்புறவை பேணுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாவும், உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவும் சேர்ந்து பயணித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News August 27, 2025

பிஹாரிகள் தாக்கப்படும் போது ஸ்டாலின் எங்கே போனார்? PK

image

தமிழ்நாட்டில் பிஹார் மைந்தர்கள் தாக்கப்பட்டபோது CM ஸ்டாலின் எங்கே போனார் என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டாலினை பிஹாருக்கு அழைத்ததன் மூலம் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பிஹாரிகள் குறிவைத்து தாக்கப்படுவதாக பொய் செய்திகள் பரப்பப்பட்டதை நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!