News November 16, 2024
நெல்லையில் இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

நெல்லை மேலப்பாளையம் அலங்கார் திரையரங்கில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் ஓடிவரும் நிலையில் இன்று மர்ம நபர் தியேட்டருக்குள் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இது குறித்த சிசிடிவி காட்சி வெளியானது. சம்பவத்தை கண்டித்து இந்து முன்னணி நிர்வாகி ஜெயக்குமார் தலைமையில் தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
Similar News
News March 6, 2026
நெல்லை காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

திருநெல்வேலி மாநகர காவல் துறையின் கீழ், மாநகர பகுதிகளான நெல்லை டவுண், பேட்டை, நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மருத்துவக்கல்லூரி, மேலப்பாளையம், பெருமாள்புரம் ஆகிய இடங்களில் காவல் நிலையங்களின் எல்லைகளில் இன்று (மார்ச்.5) இரவு ரோந்து பணி அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. திருநெல்வேலி டவுண் சரகம் உதவி ஆணையர் இளவரசன் ரோந்து பணிகளை மேற்பார்வையிடுவார்.
News March 6, 2026
நெல்லை இரவு காவல் ரோந்து அதிகாரிகள் விவரம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (மார்ச்.5) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News March 5, 2026
நெல்லை : வீடு, நில பத்திரம் உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

நெல்லை மக்களே, இங்கு <


