News March 21, 2024
கருடர் வாகனத்தில் வீதி உலா வந்த பெருமாள்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு அருள்மிகு ஸ்ரீ செங்கமலத்தாயர் சமேத சென்னகேசவ பெருமாள் கோயிலில் நேற்று 20.03.2024, இரவு, பங்குனி பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளில் பெருமாள் பெரிய திருவடியான கருடனின் வாகனத்தின் மீது ராஜா கம்பீரமான அலங்காரத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News February 16, 2026
விருதுநகர்: இனி LINE-ல் நிற்க தேவையில்லை..!

விருதுநகர் மக்களே, மின் கட்டணங்களை வரிசையில நின்னு கட்டறீங்களா? இனி அது தேவை இல்லை.. வாட்ஸ் ஆப்-ல மின் கட்டணம் செலுத்த வழி இருக்கு..
1.வாட்ஸ்அப்பில் 9498794987 (TANGEDCO) எண்ணுக்கு Hi-ஐ அனுப்புங்க
2. “Bill Payment” தேர்வு செய்து உங்கள் Consumer Number பதிவு பண்ணுங்க.
3. பில் தொகை சரிபார்த்து, UPI வழியாக பணம் செலுத்துங்க.
4. ரசீது வாட்ஸ்அப்பில் கிடைக்கும்.
இத அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!
News February 16, 2026
சிவகாசி: பட்டாசுகளை பதுக்கிய பெண் உட்பட 2 பேர் கைது

சிவகாசி அருகே போலீஸ் ரோந்தில் பாரைப்பட்டியில் சஞ்சீவ்பாபு (62) ரூ.4.64 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை பாதுகாப்பின்றி பதுக்கியதற்காக கைது செய்யப்பட்டார். நாரணாபுரத்தில் அனிதா(36) என்பவர் கடை பின்புறம் பேக்கிங் செய்தது தெரியவந்ததை அடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் 57 பெட்டிகளில் இருந்த ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் மற்றும் 2 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
News February 16, 2026
சதுரகிரி மலையேறிய பக்தர் மரணம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் சென்ற தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரைச் சேர்ந்த சுடலை (60), மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். வத்திராயிருப்பு தாணிப்பாறை வழியாக ஏறிய அவர் இரட்டை லிங்கம் அருகே மயங்கி விழுந்தார். அவரது உடல் உடற்கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனை அனுப்பப்பட்டது. சாப்டூர் காவல் நிலையம் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.


