News November 16, 2024

நீலகிரி பேராசிரியருக்கு அமெரிக்க பல்கலை. விருது

image

நீலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்த பேராசிரியர் அசோக்குமார். இவர் சென்னை சவீதா பல்கலைக்கழகத்தில் கழிவு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையத்தின் துறை தலைவராக உள்ளார். புதுப்பிக்கத்தக்க மற்றும் நிலையான ஆற்றல், திரவம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை, கார்பன் டை ஆக்சைடு குறைப்பு ஆகியவற்றில் ஆராய்ச்சிக்காக அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் சிறந்த விஞ்ஞானிக்கான விருதை வழங்கியுள்ளது.

Similar News

News March 3, 2026

BREAKING நீலகிரிக்கு முதல்வர் அறிவித்தார்!

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது என அதில் இடம் பெற்றுள்ளது.

News March 3, 2026

கூடலூர் தொகுதியில் வேட்பாளர் இவரா ?

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூடலூர் தொகுதியில் போட்டியிட கூடலூர் நகரமன்றத் தலைவர் ச.பரிமளா சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் முன்னிலையில் விருப்பமனு தாக்கல் செய்தார். அதே தொகுதியில் போட்டியிட திமுகவின் ராஜேந்திரனும் விருப்பமனு அளித்துள்ளதால், வேட்பாளர் தேர்விலேயே இப்போதே கூடலூர் தேர்தல் களம் விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளது.

News March 3, 2026

நீலகிரியில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் தலைமை தபால் நிலையத்திலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேற்று மின்னஞ்சல் (E-mail) மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது போன்ற வதந்திகளை பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

error: Content is protected !!