News March 21, 2024

திருச்சி:கேட்பாரற்று கிடந்த வாகனங்கள் பறிமுதல்

image

திருச்சி மாநகரில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஏற்கனவே 142 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நேற்று உறையூர் போலீஸ் நிலைய வளாகத்தின் பின்புறத்தில் கேட்பாரற்று கிடந்த 10 டூவிலர்களையும் , டூவீலர் நிறுத்துமிடத்தில் கேட்பாரற்று கிடந்த 12டூவீலர்கள் என 22வாகனங்களை உறையூர் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News

News February 11, 2026

திருச்சி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News February 11, 2026

ஶ்ரீரங்கம்: மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

image

திருச்சி, ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள காடை பிள்ளை அய்யனார் கோவில் திருவிழாவின்போது, கோவில் தேர் பட்டியலின மக்கள் வாழும் தெருக்களுக்கு வருவதில்லை, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திருச்சியை சேர்ந்த சத்யராஜ் என்பவர் ஹைகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக திருச்சி ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

News February 11, 2026

திருச்சி மாவட்ட அரசு துறையில் வேலை!

image

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள, 6 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://tiruchirappalli.nic.in என்ற தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு நேரடியாகவோ அல்லது தபால் வழியாகவோ வரும் 16-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!