News November 16, 2024

‘ED ரெய்டு’ நடந்தது என்ன? ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

image

ED சோதனை என்பது தனக்கானது அல்ல என VCK துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்துள்ளார். அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட முடிவெடுத்ததுமே தனது தொழில் நிறுவனங்களின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிவிட்டதாகவும், வருவாய் ஈட்டக்கூடிய எந்த தொழிலிலும் அது சார்ந்த பொறுப்பிலும் தான் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். EDயின் SEARCH ORDER தனது பெயரில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

Similar News

News August 27, 2025

இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமடம் பகுதியில் இன்று(ஆக.27) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News August 27, 2025

நாளை அனைத்து பள்ளிகளுக்கும்.. அறிவிப்பு

image

நாளை (ஆக.28) அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து 100 மீ. சுற்றளவில் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை இல்லாததை உறுதி செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி விற்றால் போலீஸில் புகாரளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 27, 2025

அதிமுக கூட்டணியில் விஜய்: RB உதயகுமார் சொல்வதென்ன?

image

அதிமுக கூட்டணிக்கு தவெக வரவேண்டும் என ஆர்.பி உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார். திமுகவை வீழ்த்த நினைத்தால் விஜய் அதிமுக கூட்டணிக்கு வரவேண்டுமென்றார். திமுகவை வீழ்த்த கூடிய சக்தி அதிமுகவிற்கு தான் உள்ளது என டெல்லியில் உள்ள பாஜகவிற்கு தெரியும் போது, விஜய்க்கு ஏன் தெரியவில்லை என்றார். முதல்வராக வேண்டும் என்பதற்காக தவெக தொண்டர்களின் உழைப்பு, எதிர்பார்ப்பை விஜய் வீணடித்திட வேண்டாம் என்றார்.

error: Content is protected !!