News November 16, 2024
தேனி மாவட்ட பயிர் சாகுபடி விவரம் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் நடப்பாண்டு நெல் இதுவரை 6313 ஹெக்டர் பரப்பிலும், சிறுதானியங்கள் 8616 ஹெக்டேரிலும், பயிறு வகைகள் 5799 ஹெக்டேரிலும், பருத்தி 1182 ஹெக்டேர் பரப்பிலும், எண்ணெய்வித்து பயிர்கள் 1652 ஹெக்டேர் பரப்பிலும் மற்றும் கரும்பு 2116 ஹெக்டேர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா தெரிவித்துள்ளார்.
Similar News
News March 11, 2026
தேனி: மழையால் மின்தடையா.? whatsapp-ல் உதவி!

தேனி மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் மின்தடை உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த தகவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 11, 2026
தேனி: அரசு மருத்துவமனையில் இவை இலவசம்!

தேனி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. ரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் தேனி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04546-250387 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.
News March 11, 2026
தேனி; கட்சி தாவிய முக்கியப் புள்ளி

தேனி மாவட்டம், கம்பம் அதிமுக ஒன்றிய பொருளாளரான வழக்கறிஞர் பரணி இன்று ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். மேலும் அவருக்கு MLA மகாராஜன், திமுக கட்சி வேஷ்டியை கொடுத்து வரவேற்றார். இந்த நிகழ்வின் போது பேரூர் செயலாளர் சரவணன், பேரூர் துணைச் செயலாளர் தங்கமாரி மற்றும் பல திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


