News November 16, 2024
Breaking: தனுஷ் மீது நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு

தனுஷ் மீது நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டை கூறி, சினிமா துறையை அதிர வைத்துள்ளார். தனுஷின் பழிவாங்கும் நடவடிக்கையால் தானும், தனது கணவரும் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் நயன் குறை கூறியுள்ளார். நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள தனது ஆவணப்படம் தொடர்பாக “நானும் ரவுடி தான்” படக்காட்சிகளை பயன்படுத்த 2 ஆண்டுகளாக காத்திருந்தேன். ஆனால், அதற்கான அனுமதியை இறுதிவரை தனுஷ் தரவில்லை என சாடியுள்ளார்.
Similar News
News August 28, 2025
இன்று இரவு வீட்டை விட்டு வெளியே வராதீங்க

கோவை, நெல்லை, குமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. இதனிடையே, தற்போது கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக இரவு வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பாதுகாப்புடன் செல்லுங்கள். உங்கள் ஊரில் மழையா?
News August 28, 2025
RSS பிடியில் அதிமுக இருப்பது உறுதியானது: திருமாவளவன்

அதிமுகவை RSS வழிநடத்தினால் என்ன தவறு என எல்.முருகன் கூறியது, அதிமுக முழுக்க RSS கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதை காட்டுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெரியார் வழியில் வந்த அதிமுக தற்போது வீர சாவர்க்கர் வழிவந்தவர்களால் வழிநடத்தப்படலாம் என்று சொல்வது கவலை அளிப்பதாகவும், இது தவறா, தவறில்லையா என்பதை EPS தான் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News August 28, 2025
இந்திய விண்வெளி துறையில் அடுத்த மைல்கல்

குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு இஸ்ரோ தலைவர் நாராயணன் அடிக்கல் நாட்டினார். இங்கு 90 கோடி ரூபாய் மதிப்பில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பு, உள்கட்டமைப்பு பணிகள் தொடங்கவுள்ளன. இதில் பேசிய நாராயணன் அடுத்த ஆண்டு இறுதிக்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து 500 கிலோ எடை கொண்ட ராக்கெட் ஏவப்படும் என்றார். இந்தியாவின் 4வது ராக்கெட் ஏவுதளமாக குலசேகரப்பட்டினம் அமையவுள்ளது.