News November 16, 2024
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 1.1.2025 தேதி தகுதியேற்றப்படும் நாளாக கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்கள் இன்றும் நாளையும் நடைபெறுகின்றன. இம்முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் அமைந்துள்ள 1561 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
Similar News
News November 8, 2025
புதுக்கோட்டை: B.E முடித்தவர்களுக்கு ISRO-வில் வேலை!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 8, 2025
புதுகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் வரும் ஜன.24 தேசிய பெண்குழந்தை தினத்தன்று மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் உள்ளிட்ட வீரதீர செயல் புரிந்த 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு பாராட்டு பத்திரமும் ரூ 1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி 04322 222270 மூலமாக தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
புதுகை: நாய் குறுக்கே வந்ததால் விபத்து!

புதுக்கோட்டையிலிருந்து கத்தக்குறிச்சிக்கு முருகன் (55) என்பவர் பைக்கில் சென்றுள்ளார்.அப்போது கத்தக்குறிச்சி இடுகாடு அருகே உள்ள சாலையில் நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்த அவர் மிகவும் ஆபத்தான நிலையில் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வல்லத்ரா கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


