News March 21, 2024
ராமநாதபுரத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனி போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நாளை கேணிக்கரையில் உள்ள தனியார் மஹாலில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெறுகிறது. இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் அறிவித்துள்ளார்.
Similar News
News March 16, 2026
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு – கலெக்டர் தகவல்

தமிழக காவல் துறையில் நடைமுறையில் உள்ள ‘ஆர்டர்லி’ முறையை முற்றிலும் ஒழிக்கும் வகையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதிய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறையில் ஆர்டர்லி முறை தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட காவலர்கள் கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) – 94450 08147 புகார் அளிக்கலாம் என கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News March 16, 2026
இராம்நாடு : சொத்து வாங்கும் போது இத CHECK பண்ணுங்க..

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து
CHECK செய்து வாங்குங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..
News March 16, 2026
இராம்நாடு: EB பில் – சான்றிதழ்கள் எல்லாமே இனி Whatsapp -ல!

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க..


