News November 16, 2024
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் அரக்கோணம் மற்றும் கலவை பகுதிகளில் உள்ள தனியார் வேளாண் கல்லூரி மாணவர்கள் 526 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 326 வருவாய் கிராமங்களில் 9,53,550 சர்வே எண்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதுவரை 4,27,969 சர்வே எண்கள் பயிர் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் வரும் 22ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 25, 2025
ராணிப்பேட்டையில் மின்தடை அறிவிப்பு

ராணிப்பேட்டை துணை மின் நிலையத்தில் இன்று (ஆக.25) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகர், வீ.சி.மோட்டூர், ஜெயராமன் பேட்டை, பழைய ஆற்காடு சாலை காந்திநகர் மேல் புதுப்பேட்டை பிஞ்சு அல்லிக்குளம் மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. (ஷேர் பண்ணுங்க)
News August 25, 2025
நாளைக்கு மிஸ் பண்ணிடாதீங்க!

சோளிங்கர் நகராட்சி உங்களுடன் ஸ்டாலின் முகாம் கீழ்கண்டை மேட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நாளை (ஆக.26) காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது 48 நாட்களில் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
ராணிப்பேட்டை இரவு ரோந்து பணி விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் -24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100