News November 16, 2024

கோவையில் தொடரும் ரெய்டு

image

துடியலூரில் தொழிலதிபர் மார்ட்டின் இல்லம், அலுவலகம் மற்றும் ஹோமியோபதி கல்லூரியில் 3வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மார்ட்டின் உறவினர் இல்லங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறையின் சோதனையானது தொடர்கிறது; மேலும் சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News March 5, 2026

கோவை: பசு மாடு வாங்க ரூ.1,00,000

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News March 5, 2026

BREAKING: சூலூர் அருகே சுட்டுப் பிடித்த போலீசார்

image

சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி புதூர் பகுதியில் கத்தியுடன் மிரட்டிய ரவுடி பாலமுருகன், பிடிபடும் போது உதவி ஆய்வாளர் யுவராஜைக் கத்தியால் வெட்டினார். இதைக் கண்ட ஆய்வாளர் பிரேம் ஆனந்த், தற்காப்பிற்காக ரவுடியைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News March 5, 2026

கோவை: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே<> கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

error: Content is protected !!