News November 16, 2024
மண்டலங்களுக்கிடையிலான ஹாக்கி போட்டியில் தனியார் கல்லூரி முதலிடம்

ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகங்களுக்கிடையேயான ஆண்கள் ஹாக்கி போட்டி நவம்பர் 12, 13 என இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் 17 மண்டலங்களில் இருந்து அணிகள் கலந்துகொண்டன. இறுதிப் போட்டியில் அதியமான் பொறியியல் கல்லூரி வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற அணியினரை அதியமான் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறக்கட்டளை செயலாளர் லாசியா தம்பிதுரை பாராட்டினார்.
Similar News
News March 18, 2026
கிருஷ்ணகிரி: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News March 18, 2026
கிருஷ்ணகிரி ஆட்சியர் திடீர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சூடாமணி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் குறித்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
News March 18, 2026
கிருஷ்ணகிரி: ஓட்டுநர் மர்மமுறையில் அடித்துக் கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே கட்டிக்கானப்பள்ளியைச் சேர்ந்த ஓட்டுநர் லோகேஷ், நேற்று இரவு மர்ம நபர்களால் போனில் அழைக்கப்பட்டு சரமாரியாகத் தாக்கிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.


