News November 16, 2024

குமரியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கை சிறப்பு முகாம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நவ.16 நாளையும் நவ.17 ஆகிய இரண்டு தினங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. அருகிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. *பகிரவும்*

Similar News

News March 3, 2026

ஆதிதிராவிட பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சிகள்

image

தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகு கலை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் சேர தகுதியான நபர்கள் www.tahdco.com இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று குமரி ஆட்சியர் அழகுமீனா கூறியுள்ளார்.

News March 3, 2026

குமரி: சொத்து பத்திரம் இனி உங்க போனில்

image

குமரி மாவட்ட மக்களே, <>இங்கு க்ளிக்<<>> செய்து தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > தேடுதல் சென்று பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க.. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

News March 3, 2026

குமரி: விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

image

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் இம்மானுவேல் (50). இவர் டிரைவர் ஆவார். இவருக்கு கடந்த ஒரு மாத காலமாக சிறுநீரக பிரச்சனை இருந்து வந்தது. இதனால், மனவேதனையில் இருந்த அவர் பார்வதிபுரம் பகுதியில் களைக்கொல்லி விஷம் மருந்தை குடித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக, இரணியல் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

error: Content is protected !!