News November 16, 2024
அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா!

ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று முதல் ஆரம்பம் ஆகிறது. இன்றைய நாளில் சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். 48 நாள் விரதத்திற்கு பிறகு இருமுடி கட்டிக்கொண்டு காடு மேடு மலையெல்லாம் கடந்து சபரிமலை நோக்கி பக்தர்கள் பயணம் மேற்கொள்வார்கள். அவ்வாறு சென்று ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்களுக்கு தீராத பிரச்னைகள் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை.
Similar News
News March 2, 2026
நெல்லை: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

நெல்லை மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News March 2, 2026
பங்குச்சந்தை வீழ்ச்சி.. ₹8 லட்சம் கோடி இழப்பு!

இஸ்ரேல்- US- ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்கு சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று சென்செக்ஸ் 1,498 புள்ளிகளும், நிப்டி 455 புள்ளிகளும் வீழ்ந்தன. முதலீட்டு மதிப்பில் சுமார் ₹8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது. எண்ணெய் நிறுவனப் பங்குகள் 6% வரை சரிந்துள்ளன. ஆனால், பாதுகாப்பு துறை பங்குகள் மட்டும் 5% – 13% வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 2, 2026
தவெக – காங்கிரஸ் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை?

தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க காங்., முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ராகுல் ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ள நிலையில், ஆதவ்வும் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுவதால் இதுகுறித்த யூகங்கள் வலுத்துள்ளன. மேலும், இதுபற்றி காங்கிரஸாரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறதாம். அத்துடன் கூட்டணி பற்றிய முடிவை இன்று மாலைக்குள் சொல்லுமாறு காங்.,க்கு திமுக கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


