News March 21, 2024
பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்குமா?

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு ஐகோர்ட் விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் எம்.எல்.ஏவான பொன்முடியை மீண்டும் அமைச்சராக்குமாறு முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்க, ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.
Similar News
News July 9, 2025
ஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஒன்லிஃபேன்ஸ்

பணியாளருக்கு ஈடான வருமானத்தை ஈட்டுவதில் டெக் ஜெயண்ட் நிறுவனங்களான ஆப்பிள், NVIDIA நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி ஆபாச சோஷியல் மீடியா தளமான ஒன்லிஃபேன்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. ஒன்லிஃபேன்ஸ், ஒரு பணியாளருக்கு $37.6 மில்லியன் டாலர் என்ற அளவில் வருமானம் ஈட்டுகிறது. வால்வ் ($19M), யூட்யூப் ($7.6M), NVIDIA ($3.6M), இன்ஸ்டாகிராம் ($2.5M), ஆப்பிள் ($2.4M) மெட்டா ($2M) வருமானம் ஈட்டுகின்றன.
News July 9, 2025
நாளை வழக்கம்போல பஸ்கள் ஓடும்: சிவசங்கர்

நாளை(ஜூலை 9) தமிழகத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். <<16987412>>மத்திய அரசை கண்டித்து<<>> நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் நாளை பஸ்கள் வழக்கம் போல் தமிழகத்தில் இயங்குமா என மக்களுக்கு பெரும் கேள்வி எழுந்தது. ஆனால் அதில் பாதிப்பு இருக்காது என அமைச்சரே விளக்கம் அளித்துள்ளார்.
News July 9, 2025
ராசி பலன்கள் (09.07.2025)

➤ மேஷம் – செலவு ➤ ரிஷபம் – தடங்கல் ➤ மிதுனம் – சுகம் ➤ கடகம் – பிரீதி ➤ சிம்மம் – ஆதரவு ➤ கன்னி – களிப்பு ➤ துலாம் – தடை ➤ விருச்சிகம் – வரவு ➤ தனுசு – நட்பு ➤ மகரம் – தாமதம் ➤ கும்பம் – சிக்கல் ➤ மீனம் – இன்பம்.